சிறந்த நிர்வாக பண்புகளை கொண்ட பன்முக ஆளுமை நிறைந்தவர். கல்வி துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர், பழகுவதற்கு அன்பானவர் அனைவராலும் அமீன் அண்ணன் மற்றும் அமீன் சார் என்று பிரபலமாக அறியப்பட்டவர் தரமான கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயர்த்த நோக்கத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கிராமபுறத்து மாணவர்களுக்காக தன் வாழ்நாளை அர்பணித்த சமூக அக்கரை கொண்டவர்.
வலுவான மதிப்புகளை கொண்ட மிகவும் மகிழ்ச்சியான நபர். மாணவர் - ஆசிரியர் உறவுக்கு பாலமாகவும், ஊக்குவிக்கும் நபராக இருப்பவர். விவேக குணமும் நம்பிக்கை கொண்ட நபர். சிக்கல்களை சிறந்த முறையில் தீர்க்கும் திறன் கொண்டவர். மேலாண்மை குழு உறுப்பினர் மற்றும் பள்ளியின் முதல்வர்.
சிறந்த ஆளுமையும் நல்ல தகவல் தொடர்பு திறனும் உடையவர். பள்ளி வளர்சிகாக புதிய கருத்துகளை வழங்குவதில் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்தி தன் ஆலோசனைகளை திறந்து மனதுடனும், தைரியத்துடனும் எடுத்து சொல்பவர். எங்கள் நிர்வாக தூணில் ஒருவர்.