கணிதம் சந்தோசத்தை கூட்டவோ, கவலையக் கழிக்கவோ நமக்கு கற்றுத் தருவதில்லை. ஆனால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் (கணக்கிற்கான ) தீர்வை காரணத்தோடு கற்றுக் கொடுக்கிறது. நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு அபாகஸ் என்று சொல்லப்படும் முறையில் சொல்லி கொடுப்பதால் கணக்களை மிகுந்த ஆர்வத்துடனும், விரைவாகவும், எளிமையாகவும் போட்டுகிறார்கள்.
மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையில் நடைப்பெற்ற போட்டிகளில் மிக சிறப்பாக பங்கேற்று பல பரிசுகளை பெற்று வந்தார்கள்.
தேசிய அளவில் நடைப்பெற்ற திறந்த வெளி போட்டி சென்னையில் நடைப்பெற்றதில் கலந்துக் கொண்டு ஐந்தாம் இடத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்கள்.