19ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு, கிட்டதட்ட ஒரு நூற்றாண்டிற்கு மேல் செயல்பட்டு கொண்டிருக்கும் இப்பள்ளியில் தான் எங்களின் வழிக்காட்டி திரு K.M.ஷேக் அலாவுதீன் (97 வயது) படித்தப் பள்ளி இது. நிதி நெருக்கடி காரணமாக பள்ளியை செயல்படுத்த இயலாத நிலையில், பள்ளியை தன் சொந்த பொறுப்பில் எடுத்துக் அதற்கு "அலாவுதீன் தொடக்கப்பள்ளி" என்று பெயரிட்டு 1947 முதல் தமிழ்வழி கல்வியை இந்த பகுதி மக்களுக்காக இலவச கல்வி கொடுக்கப்பட்டது. 1954ல் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த திரு K. காமராஜர் அவர்கள் நம் பள்ளிக்கு உரிய அங்கீகாரம் அளித்து மேலும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியமும் அரசே வழங்க தொடங்கியது.
மேலும் வாசிக்க