ஒவ்வொரு வருடமும் ஜூலை 15ம் நாள் மறைந்த முன்னால் முதல்வர் கர்ம வீரர் திரு K. காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம். படிக்கும் பிள்ளைகளுக்கு மதியம் இலவசமாக வழங்கி உலகிற்கே முன்மாதிரியாக நிகழ்ந்தவர்.
15 ஆகஸ்ட் 1947 அன்று நம் நாடு சுதந்திரம் பெற்றது. அதனை நினைவூட்டும் வகையில் இவ்வருடம் 78வது சுதந்திர தினக்கொடியை முன்னால் மாவட்ட கல்வி அதிகாரி திருவாரூர் அவர்கள் ஏற்றி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவர் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் 5. அதனை ஆசிரியர் தினமாக கொண்டாடுவோம். இந்த வருடமும் நம் பள்ளியில் கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடைப்பெற்றது வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
அக்டோபர் 15ம் தேதி இந்தியாவின் 11வது குடியரசு தலைவர் திரு APJ அப்துல் கலாம் பிறந்த நாளை உலக மாணவர்கள் தினமாகவும்; உலக கைகழுவும் தினமாகவும் நம் பள்ளியில் கொண்டாடி பரிசுகளும் வழங்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் திரு நேரு அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாகவும். சுதந்திர போராட்ட தியாகியும், முதல் கல்வி அமைச்சருமாகிய மௌலான அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 11ம் தேதி தேசிய கல்வி நாளாகவும் கொண்டாடப்பட்டது. LKG & UKG பிள்ளைகளின் மாறுவேட நிகழ்ச்சி நடைப்பெற்றது. விழாவிற்கு கூத்தாநல்லூர் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் திரு அருண்குமார் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.
ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாப்படும். அதேப்போல் இந்த வருடமும் நம் பள்ளியில் டாக்டர் அல் அமீன் தாளாளர் அவர்கள் தேசிய கொடி ஏற்றி கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு மாணவர்களின் ஆரோக்கியத்தையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சிக்கும் ஒரு களம். அனைவரும் விளையாட்டு போட்டியில் கட்டாயம் கலந்துகொள்ள ஆர்வமூட்டபடுவார்கள். வெற்றி பெற்ற மாணாட்களுக்கு வடபாதிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு K.பரமானந்தம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.