இந்த கல்வி ஆண்டு முதல் (2024-25) LKG, UKG, 1,2 & 3 வகுப்புகளுக்கு CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த ஆண்டு முதல் அத்திக்கடை, பொதக்குடி, சேகரை மற்றும் சேந்தங்குடி வரை வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் 7667746872 / 9788863583 / 04367 232 666 / 235 666

எங்கள் பள்ளி

Dr.Al Ameen A.R.Matriculation School

எங்கள் பள்ளி

19ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு, கிட்டதட்ட ஒரு நூற்றாண்டிற்கு மேல் செயல்பட்டு கொண்டிருக்கும் இப்பள்ளிதான் எங்களின் வழிக்காட்டி மர்ஹும் K.M.ஷேக் அலாவுதீன் (97 வயது) படித்தப் பள்ளி. இது. நிதி நெருக்கடி காரணமாக மேற்கொண்டு செயல்படுத்த இயலாத நிலையில் இருந்த இந்தப் பள்ளியை 1947ம் ஆண்டு அதன் முன்னால் மாணவனாக இருந்த மர்ஹும் K.M.ஷேக் அலாவுதீன் அவர்கள் தன் சொந்த பொறுப்பில் எடுத்துக் அதற்கு "அலாவுதீன் தொடக்கப்பள்ளி" என்று பெயரிட்டு 1947 முதல் தமிழ்வழி கல்வியை இப்பகுதி மக்களுக்காக இலவசமாக வழங்கிட வழிக்காட்டியானார்.

1954ல் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த திரு K. காமராஜர் அவர்கள் நம் பள்ளிக்கு உரிய அங்கீகாரம் அளித்து, மேலும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியமும் அரசே வழங்க தொடங்கியது. இன்றுவரை 4 ஆசிரியர்களும், நூற்றுக்கு மேற்ப்பட்ட பிள்ளைகளை கொண்டு நடைப்பெற்று கொண்டு இருக்கிறது.

கால மாற்றத்திற்கு ஏற்ப 2014ம் ஆண்டு முதல் பன்னாட்டு தரத்திற்கு இணையான ஆங்கிலவழி பள்ளியை நிறுவ வேண்டும் என்ற சீரிய நோக்கோடு ஆசிரிய பயிற்சியை முறையாக முடித்து ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 35 வருடங்களாக பணிப்புரிந்து ஒய்வுப் பெற்ற ஹஜ்ஜா S. ருக் ஷாண பீவி W/O K.M.S. அலாவுதீன் அவர்களால் K.M.S. அலாவுதீன் கல்வி அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்டதே “டாக்டர் அல் அமீன் ஏ.ஆர் நர்சரி & பிரைமரி பள்ளி யாகும். அடுத்தக்கட்டமாக 2020ல், 10ம் வகுப்பு வரை உயர்கல்வி தொடங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இயற்கை சூழ்நிலை கொண்ட 5 ஏக்கர் இடப்பகுதியில் தமிழக அரசிடம் முறையாக DTCP அனுமதி பெற்று டாக்டர் அல் அமீன் ஏ ஆர் மெட்ரிக் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது 2021ம் ஆண்டு. பள்ளியின் அரசு அங்கீகார எண் # 21-M-057-0922 .

About

எங்கள் நோக்கம்

ஒரு நாட்டின் வளர்ச்சி கிராமத்தில் இருக்கிறது என்பதற்கு ஏற்ப எங்கள் நோக்கம் தரமான கல்வியை கிராமத்தில் வழக்குவது.

நாங்கள் நாளைய பணியாளர்களை உருவாக்கவில்லை, சிறத்த குடிமக்களை உருவாக்குகிறோம்.

எங்களது நோக்கம், வகுப்பறை கல்வி மட்டுமல்ல, வாழ்வியல் கல்வி.

எங்கள் பார்வை

சமூகத்திலும் , பொருளாதாரத்திலும் பின் தங்கிய மக்கள் அனைவருக்கும் தரமான கல்வியை நியாயமான கட்டணத்தில் வழங்குவது.

கல்வியின் மூலம் புதுமை மற்றும் படைப்பாற்றலை வளர்ப்பது.

கற்கும் பிள்ளைகளுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உறுதுணையாக இருத்தல்.

எஸ். ருக் ஷானா பீவி- பள்ளி நிறுவனர் செய்தி

கல்வி ஒன்றே ஒருவனை உயர்த்துகிறது. அனைத்தையும் இழந்த ஒருவனிடம் கல்வி மட்டும் இருந்தால் அதனை கொண்டு இழந்த அனைத்தையும் அடைய முடியும் என்பதனை என் வாழ்வின் மூலம் உணர்ந்த ஒன்று.

அழியா செல்வம் கல்வி ஒன்றே! இதனை மனதில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான கல்வி அளிக்க வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தரவேண்டும்.

மேலே சொன்ன சீரிய நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டதே இந்த பள்ளி. இதில் அனைத்து சமூகத்தினரும் கல்வி பயின்று பயனடைய வேண்டும் என்பதே என் அவாவா க இருக்கிறது ற்

ஹாஜி கே.எம்.சேக் அலாவுதீன் – வழிகாட்டியின் செய்தி

"நாம் அறியாமையை ஒழித்தால் மட்டுமே வீடும், நாடும் சரியான பாதையில் முன்னேற முடியும்".

"அறியாமையை போக்கும் ஒரே ஆயுதம் கல்வி."

அந்த கல்வியை சாதி சமய வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாக கொண்டு இந்த நிறுவனத்தை கொண்டு செல்கிறேன்.

டாக்டர் அல் அமீன் – நிர்வாகி செய்தி

அனைவருக்கும் நியாயமான, தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும். குறிப்பாக கிராமப்புற (Rural) பகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்திற்கும் பன்னாட்டு கல்வி நிறுவனங்களின் தரத்தில் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.

அதற்காக என் வாழ்நாளை சமுதாய நோக்கோடு கல்விக்காக அர்பணித்து, கிராமபுறத்தில் உள்ள பிள்ளைகள் அனைவரும் கல்விப் பெற்று வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும்.

இதனால் அறியாமை என்பது முடிவுக்கு வந்து, அறிவுள்ளவர்களாக அனைவரும் முன்னேற வேண்டும் என்பதே என் செய்தியாக உங்களுக்கு தெரிவிக்கிறேன்.